30 சென்ட்... 140 நாள்கள்... ரூ.73 ஆயிரம் வருமானம்! - பங்கமில்லாமல் வருமானம் கொடுக்கும் பந்தல் காய்கறி!

மகசூல்ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

விவசாயத்தில் தினமும் உத்தரவாதமான வருமானம் காய்கறிகள் மூலமாகவே கிடைத்து வருவதால், விவசாயிகள் பலரும் காய்கறிச் சாகுபடியில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். குறிப்பாக, பாகல், பீர்க்கன் போன்ற பந்தலில் காய்க்கும் காய்களுக்கு எப்போதுமே கட்டுபடியான விலை கிடைக்கிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் பந்தல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அடுத்துள்ள சுள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரபுசங்கர். இவர் ‘கொட்டாரப் பந்தல்’ முறையில் பாகல், பீர்க்கன், புடலை போன்ற காய்கறிகளை இயற்கைமுறையில் சாகுபடி செய்து வருகிறார்.

ஒரு காலைப் பொழுதில் பிரபுசங்கரின் தோட்டத்துக்குச் சென்றோம். முக்கோண வடிவில் நீளமாக அமைக்கப்பட்டிருந்தது, கொட்டாரப் பந்தல். பந்தலில் படர்ந்திருந்த கொடிகளில் தோரணம்போலத் தொங்கிக் கொண்டிருந்தன, பீர்க்கன் காய்கள். நம் வருகையைத் தெரிந்துகொண்ட பிரபுசங்கர், மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்...

“விவசாயமே வேண்டாம். அப்பா காலத்தோடு போகட்டும். டவுன் பக்கம் போயி பெட்டிக்கடை வெச்சுக்கூடப் பிழைச்சுக்கலாம்னு பரம்பரை விவசாயத்தை விட்டுட்டு ஓடிப்போனவன் நான். அப்போ விவசாயத்துல அந்தளவுக்குக் கஷ்டம். நல்ல விளைச்சல் கிடைச்சா விலை கிடைக்காது. விலை கிடைக்கிறப்போ தண்ணீர் இருக்காது. இதுக்கு இடையில உரம், பூச்சிக்கொல்லினு சாகுபடிச் செலவு வேற.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick