வெட்டிவேர் செருப்பு!

நாட்டு நடப்புதுரை.நாகராஜன்


மீபகாலமாக வெட்டிவேர் பல வழிகளில் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘இந்தியன் வெட்டிவேர் நெட்வொர்க்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெட்டிவேரை மதிப்புகூட்டிய பொருள்களாக விற்பனை செய்து வருகிறார்கள். இதுகுறித்து பேசிய புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த்.

“மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் பலவிதமான பொம்மைகள், செருப்புகள், மாலைகள், கால்மிதிகள், படுக்கை விரிப்புகள், வாசனை திரவியங்கள், சோப்புகள் என்று 60-க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இப்போது வெட்டிவேர் செருப்பினை தயார்செய்து 400 ரூபாய் விலையில்  விற்பனை செய்து வருகிறோம். இந்த செருப்பானது, உடலின் வேர்வையும், சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. வெட்டிவேர் தொப்பியை பெண்கள் நறுமணத்திற்காகவும் தலையில் அணிவதுண்டு” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick