நிலம்... நீர்... நீதி - சீரடைந்த ஏரிகள், பாதுகாப்பில் களம் இறங்கிய விவசாயிகள்!

நீர்நிலைவிகடன் குழு, படங்கள்: ப.சரவணகுமார், தே.அசோக்குமார்

பெரிய பெரிய அணைகளைக் கட்டி தண்ணீரைச் சேமிப்பது ஒருவகை என்றால், ஒவ்வொரு கிராமத்துக்கும் ஓர் அணையாக இருந்து செயல்படுவது ஏரிகள்தான். இந்த ஏரிகள் மூலமாக விவசாயத்துக்குப் பெரியளவில் பாசனம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்க வைக்கவும் ஏரிகள் உதவி வருகின்றன. கடந்தாண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல ஏரிகளில் கரைகள் உடைந்து, தண்ணீர் சேமிக்க முடியாமல் வீணானது. குறிப்பாகச் சென்னையைச் சுற்றியுள்ள பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு ஆறு வழியாகக் கடலில் கலந்தது. இதைக் கருத்தில் கொண்டு விகடன் ‘நிலம்... நீர்... நீதி!’ திட்டத்தின் சார்பில் சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகள் சில, கடந்த ஆறு மாதங்களாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பான்மையான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் ஏரிகளில் தண்ணீர் தற்போதைய மழைக்குத் தேங்கி நிற்கிறது.

 காஞ்சிபுரம் மாவட்ட அரசுத் துறை அதிகாரிகள், பாலாறு வடிநிலப்பகுதிப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் என ஒவ்வொருவரும் முழு ஒத்துழைப்பு நல்க, இந்தப் பணிகள் அடுத்தடுத்த கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!