விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உலகுக்குச் சோறுபோடும் சிறு விவசாயிகள்!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

1989-ம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறத் தொடங்கிய நேரம் அது. அந்தச் சமயத்தில்  வேளாண்மைக்காகவும் வணிகத்துக்காகவும் சோவியத் யூனியனை அதிகம் நம்பியிருந்த கியூபா நாட்டின் வேளாண் பொருளாதாரம் ஆட்டம் காணத்தொடங்கியது. அப்போது கியூபா நாட்டின் விளைநிலங்களில் அதிகளவு கரும்புதான் விளைவிக்கப்பட்டது. அந்தக் கரும்பைச்  சோவியத் யூனியனுக்கு பிரீமியம் விலையில் விற்பனை செய்து கொண்டிருந்தது. அதனால், உள்நாட்டு உணவுத் தேவைக்கு வெளிநாடுகளையே நம்பியிருந்தது கியூபா. சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிரச்னையால் கியூபா நாட்டு மக்களின் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிப்பது அந்நாட்டு அரசுக்குப் பெரிய கேள்விக்குறியானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் உணவு தானிய உற்பத்தியில் அக்கறை செலுத்தாமல் விட்டுவிட்டதை உணர்ந்தது கியூபா.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவுடன் போட்டிபோடும் வகையில் இயந்திரங்களை அதிகமாகப் பயன்படுத்தி நவீன வேளாண்மையை மேற்கொண்டு வந்தது கியூபா மட்டும்தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில்... நவீன வேளாண்மைக்குப் பயன்பட்டு வந்த பெட்ரோல், டீசல், உரம், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றுக்குத் திடீரெனப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல் இல்லாமல் டிராக்டர் ஓட்டமுடியாது, பூச்சிக்கொல்லிகள் தெளிக்கமுடியாது. விவசாயிகள் திக்குமுக்காடிப் போனார்கள். அதனால், வேறு வழியே இல்லாமல் இயற்கை வேளாண் முறைகளைக் கையிலெடுத்தது கியூபா. 2002-ம் ஆண்டில் நகரப் பண்ணைகளில் மட்டும் 32 லட்சம் டன் இயற்கை உணவை உற்பத்தி செய்தது கியூபா. இந்த முயற்சிகளினால் மீண்டும் கியூபா மக்கள் நாளொன்றுக்கு 2,600 கிலோ கலோரி உணவை எடுத்துக் கொள்ளத் தொடங்கியதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மைக்கான அமைப்பு கூறியது. இவற்றைத் தாண்டி இன்று உலக அரங்கில் ஆரோக்கியத்திலும் சுகாதார அளவீடுகளிலும் கியூபா பல மைல் தூரம் முன்னால் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் உணவுத் தேவையை, இயற்கை வேளாண்மையைக் கொண்டு நிச்சயம் பூர்த்தி செய்யமுடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது கியூபா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick