மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம் | Manpuzhu Mannaru - Pasumai Vikatan | பசுமை விகடன்

மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தி யோசிஓவியம்: ஹரன்

தின்பண்டங்கள் விற்கும் கடைவீதிக்குள்ள நுழைஞ்ச குழந்தை மாதிரி மனசு குஷியா இருந்துச்சு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்ள நுழைஞ்சபோது. இங்க, சமீபத்துல நடந்த தேசிய விதைத் திருவிழாவுலதான் இந்த அனுபவம் கிடைச்சது. இந்தியா முழுவதுமுள்ள பாரம்பர்ய விதை சேகரிப்பாளர்கள் தங்களோட விதைச் சேகரிப்பைக் காட்சிக்கு வெச்சிருந்தாங்க. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், உத்தரகாண்ட், மேற்கு வங்கம்னு ஒவ்வொரு மாநில விதை அரங்கையும் சுத்திப் பார்த்துக்கிட்டு வந்தேன்.

‘‘இதோ இங்கே ஓர் அதிசயம் இருக்கிறது. கவனமாகப் பாருங்கள்’’னு சொன்னாரு மேற்கு வங்க மாநில அரங்கில் இருந்தவர். விதவிதமான நெல் ரகங்களுக்கு மத்தியில் ஆங்கிலம், பெங்காலி மொழிகளில் நோட்டீஸ் இருந்துச்சு. அந்த நோட்டீஸுகுள்ள ‘பிழைக்கும் வழி’னு தமிழ் எழுத்து கண்ணைச் சுண்டி இழுத்துச்சு. என்னோட கண்ணுல தெரிஞ்ச ஆச்சர்யத்தைப் பார்த்த அந்த நண்பர், அது சம்பந்தமா பேசத் தொடங்கினாரு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick