நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு! - 25 சென்ட் நிலம்... ஆண்டுக்கு ரூ 3 லட்சம்

கால்நடைஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

 கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கால்நடை வளர்ப்பு மூலமாகத்தான் ஓரளவு வருமானம் பார்த்து வருகிறார்கள் விவசாயிகள். அதிலும் ஆடு மாடுகளுக்குக்கூட  தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்ட சூழ்நிலையில், நாட்டுக்கோழி வளர்த்து வந்த விவசாயிகள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டனர். இப்படி வறட்சிக் காலத்திலும் கைகொடுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். பிராய்லர் கோழிகளைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தீங்கு நேரும் என நம்பப்படுகிறது. அதனால், நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பிருக்கிறது.

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு முறையான பயிற்சி மற்றும் திட்டமிடல் மிகமிக அவசியம். இல்லையெனில் கையைச் சுட்டுக்கொள்ள நேரிடும். அந்த வகையில் பயிற்சிக்குப் பிறகு, இயற்கையான மேய்ச்சல் முறையில் வெற்றிகரமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடியைச் சேர்ந்த ஜோசப் ஆரோக்கியராஜ்-பிரான்சிஸ் பிரியா தம்பதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick