விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
விவசாயத்தை அழிக்க வரும் புதிய பூதம்!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

விவசாயிகளுக்கு எந்தவித மானியமும் கொடுக்காமல் அவர்கள் விளைவிக்கும் பொருள்களை அடிமாட்டு விலைக்குத்தான் விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டால், விவசாயிகளின் நிலை என்னவாகும் வளரும் நாடுகளுக்கு அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி, வளர்ந்த நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது உலக வர்த்தக நிறுவனம்.

வளரும் நாடுகளில் உள்நாட்டு வேளாண் மானியத்தைக் குறைப்பது; வளர்ந்த நாடுகளில் வழங்கப்படும் மானியங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது; இறக்குமதி வரிகளைத் தளர்த்திப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தங்கு தடையற்ற உலக வர்த்தகத்தை உருவாக்க முயல்வது... போன்ற உலக வர்த்தக நிறுவனத்தின் செயல்பாடுகளால் வளரும் நாடுகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் வேளாண் பொருளாதாரம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick