சிறப்பு மின் இணைப்புத் திட்டம்... - பண முதலைகளுக்குதான் பலன் தரும்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

மிழகத்தில் இலவச விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார்கள் லட்சக்கணக்கான விவசாயிகள். இந்த நிலையில், பணம் செலுத்தி மின் இணைப்பு பெறும் வகையில் சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

‘ஐந்து குதிரைத் திறனுள்ள மின் மோட்டார் வைத்திருப்பவர்கள் 2,50,000 ரூபாய்; ஏழு குதிரைத் திறனுள்ள மின் மோட்டார் வைத்திருப்பவர்கள் 2,75,000 ரூபாய்; பத்து குதிரைத் திறனுள்ள மின் மோட்டார் வைத்திருப்பவர்கள் 3 லட்சம் ரூபாய் எனச் செலுத்தினால் 6 மாதங்களுக்குள் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் விவசாயிகள் பலன் அடைவார்கள்’ எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ‘பணம் செலுத்தினால்தான் மின் இணைப்பு கிடைக்கும்’ என்ற சூழல் உருவாகியிருப்பதால் இலவச மின்சாரம் கிடைக்கும் எனக் காத்திருந்த விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick