கடன் மறுசீரமைப்பு... விவசாயிகளுக்குப் பலன் தருமா?

பிரச்னைக.சரவணன்

2016-ம் ஆண்டிலிருந்து கடுமையான வறட்சியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு. இது கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்குப்பிறகு ஏற்பட்டுள்ள வறட்சி என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். இந்த வறட்சி நூற்றுக்கணக்கான விவசாயிகளைக் காவு வாங்கியிருக்கிறது. மாண்டுபோன விவசாயிகள் அத்தனை பேருமே வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் கடன் வாங்கி விவசாயம் மேற்கொண்டவர்கள்.

கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கடனைக்கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பிக்கவும் செய்வதறியாது தற்கொலை முடிவைத்தேடியிருக்கிறார்கள் விவசாயிகள்.  இத்தகைய கொடூர விளைவுகள் ஏற்பட்ட பிறகும் கடனைக்கேட்டு விவசாயிகளை மிரட்டுவதை வங்கிகள் நிறுத்தியபாடில்லை. ‘கடன் வாங்கிய விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது’ என ரிசர்வ் வங்கி தெளிவாக வழிகாட்டியிருந்தாலும், அவற்றை நடைமுறைப் படுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick