இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்... இது கதிராமங்கலம் சாதனை! | Natural Gas waste good Rice yield in Kathiramangalam - Pasumai Vikatan | பசுமை விகடன்

இயற்கை எரிவாயுக் கழிவில் செழிக்கும் நெல் விளைச்சல்... இது கதிராமங்கலம் சாதனை!

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

முன்பெல்லாம் வாழ்வின் அனைத்துத் தேவைகளும் தற்சார்புடையனவாகவே இருந்தன. வீட்டில் வளர்க்கப்பட்ட மாடுகளின் சாணத்தைக் கொண்டு, வெயில் காலமான சித்திரை மாதத்தில் வறட்டி தட்டிக் காய வைத்துச் சேமித்துக் கொள்வர் நம் முன்னோர். அதைத்தான் ஆண்டு முழுவதும் எரிபொருளாகப் பயன்படுத்துவர். அடுப்பில் கிடைக்கும் சாம்பலை உரக்குழியில் சேமித்து, நிலத்தில் இட்டு மண்ணை வளப்படுத்திக் கொள்வர். இப்படி ஒன்றின் கழிவை இன்னொன்றுக்குப் பயன்படுத்தி வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டிருந்தனர். அதாவது, கால்நடைகள் மூலம் மண்ணுக்கு உரமும் கிடைத்தது; சமையலுக்கு எரிபொருளும் கிடைத்தது.  அதன் அடுத்த பரிமாணமாகச் சாண எரிவாயுக் கலன்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். அதிலிருந்து வெளியாகும் கழிவை நிலத்தில் இடுபொருளாகப் பயன்படுத்தினர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்ததனால் இன்று கிராமங்களில்கூட சமையலுக்கு எரிவாயு சிலிண்டர்களைத்தான் பயன் படுத்துகிறார்கள். அதன் காரணமாகத் தான், விளைநிலங்களை அழித்து மீத்தேன் எடுக்கத் துணிகிறது அரசாங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick