நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தோல் நோய்க்குச் சங்கன் குப்பி... கபம் போக்கும் முள் சங்கன்!மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

தமிழ்ப் பெயர்   தாவரவியல் பெயர்
        
சங்கன் குப்பி   
  CLERODENDRUM INERME

முள் சங்கன் 
    AZIMA TETRACANTHA 

சங்குப்பூ 
             CLITORIA TERNATEA 

வ்வொரு தாவரமும் ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர் இன்ன தாவரம், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பதுதான் வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தை யும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக் கிறோம். இத்தொடரில் உள்ள மருத்துவக் குறிப்புகள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் சங்கன் குப்பி, முள் சங்கன், சங்குப்பூ ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.

சங்கன் குப்பி


படர்ந்து வளரக்கூடிய புதர்த் தாவரம் இது. பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. மதில் சுவர்போல இச்செடிகளை வெட்டி அழகுபடுத்தி வளர்ப்பார்கள். இதன் இலைகள், வெகுட்டலான மணம் கொண்டிருப்பதால் பீச்சங்கன், பீநாறிச்சங்கன் என்று இதை அழைக்கிறார்கள். சென்னை, மெரினா கடற்கரையில் சாலையோரத் தடுப்புச் சுவர் தாவரமாக வளர்க்கப்பட்டுள்ளது. இது மணற்பாங்கான நிலத்தில் செழித்து வளரும். ஆடு மாடுகள் இதைச் சாப்பிடுவதில்லை. அடர்ந்த புதர்த் தாவரமாக வளர்வதால், உயிர்வேலி அமைக்க ஏற்றது. இதன் இலை, வேர் ஆகிய இரண்டுமே சிறந்த மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கின்றன.

இதை, ‘தோல் நோய் மருத்துவர்’ என்று கூடச் சொல்லலாம். கரப்பான், காளாஞ்சகப்படை (சொரியாசிஸ்), விஷக்கடி, ஊறல், தடிப்புகள் போன்ற அனைத்துவிதமான தோல் நோய்களுமே ‘அலர்ஜி’யால்தான் வருகின்றன என்று ஆங்கில மருத்துவத்தில் காரணம் சொல்வார்கள். பாரம்பர்ய மருத்துவத்தில், இவை விஷத்தால் உண்டாகிறது எனக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சங்கன் குப்பி இலைகளைப் பறித்துச் சிறிது மோர் அல்லது நீராகாரம் விட்டுத் துவையல்போல அரைத்து, 40 நாள்கள் வரை தினமும் காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சிறு நெல்லிக்காயளவு உண்டுவந்தால் ரத்தம் சுத்தமாகி தோல் நோய்கள் குணமாகத் தொடங்கும். ‘அகத்தியர் குழம்பு’ எனும் சித்த மருந்தைச் சங்கன் குப்பி இலைத்துவையலோடு சேர்த்து மூன்று நாள்கள் சாப்பிட்டால் பேதியாகும். இப்படிப் பேதியான பிறகு மருந்து எடுத்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick