பயிர்களின் பாதுகாப்புப் படை! - உதவிக்கு வரும் உயிரியல் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நோய்க் காரணிகளை அழிக்கும் நுண்ணுயிர்கள்சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் - தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

யற்கை உர பற்றாக்குறை மற்றும் சூழல் காரணமாக மண்ணை வளமாக்கும் நுண்ணுயிர்கள் அழிந்துகொண்டே வருகின்றன. எதிர் உயிர் பூஞ்சணம் என அழைக்கப்படும் இந்த நுண்ணுயிர்கள், பயிர்களின் வேர்களில் வளர்ந்து, தீமை செய்யும் பூஞ்சணங்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. சில நுண்ணுயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தைக் (நைட்ரஜன்) கிரகித்து மண்ணில் நிலைநிறுத்தும் பணியையும், சில நுண்ணுயிர்கள், மண்ணில் இடும் பொட்டாஷ் சத்துகளைப் பயிர் எடுத்துக்கொள்ளும் வகையில் உடைத்துத் தரும் பணியையும் செய்கின்றன. அதுபோன்ற மண்ணை வளப்படுத்தும் சில நுண்ணுயிர் உரங்கள் பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். தொடர்ந்து, நோய் எதிர்ப்புக் காரணிகளை உருவாக்கும் சில உயிர் உரங்கள் பற்றிப் பார்ப்போம்.

பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தும்போது, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. விளைபொருள் விஷமாகிறது. பூச்சி மற்றும் நோய்களில் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிவிடுகிறது. நன்மை செய்யும் பூச்சிகள் இறந்துவிடுகின்றன. இவ்வளவு சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், ‘நோய்த் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியில்லாமல்தான் இவற்றைத் தெளிக்கிறோம்’ என விவசாயிகள் சொல்கிறார்கள். ஆனால், இயற்கை முறையில் இதற்கான தீர்வு சின்னச் சின்ன நுண்ணுயிர்களிடம் இருக்கிறது. சில நுண்ணுயிர்கள், பயிருக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், நோயை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இதனால் பயிரின் வளர்ச்சி அதிகமாவதுடன், நோயில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நுண்ணுயிர்களில் ஒன்றுதான் சூடோமோனஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick