மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்... | Water Harvesting and Water Saving Techniques - Pasumai Vikatan | பசுமை விகடன்

மழைநீரைச் சேமிக்கும் வித்தை! - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...

நீர் மேலாண்மை ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ண்ணீர்ச் சேமிப்பு இன்றைய காலகட்டத்தில் சர்வதேசத் தேவையாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, தமிழகம் வறட்சியைச் சந்தித்து வந்தாலும், இந்த ஆண்டு அதிகரித்துள்ள வெப்பத்தாலும் பொய்த்துப்போன பருவமழையாலும் நிலவும் வறட்சி, வரலாற்றுப் பதிவாக ஆகிவிட்டது. ஆண்டுக்கணக்கில் வற்றாத கிணறுகள்கூட வற்றிக் கிடக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீருக்குப் பதிலாகக் காற்றுதான் வருகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் வகையில் நபார்டு வங்கி, தொண்டு நிறுவனங்கள் மூலமாக மழை நீர் மற்றும் நிலத்தடி நீர்ச் சேமிப்புக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களைச் செயல்படுத்திவரும் விவசாயிகள், அதன் பலன்களைத் தற்போது உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த கிராமமும் வறட்சியில் வாடிக்கிடக்கும் கடுமையான சூழலிலும் நிலக்கடலைச் சாகுபடி செய்து முடித்திருக்கிறார், மதுரை மாவட்டம், பேரையூர் தாலூகா, பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வனராஜ்.

“எங்க ஊர் நெல் விவசாயத்துக்குப் பேர் போனது. ஒரு காலத்துல ஊரை ஒட்டுன இடங்கள்ல இறவை விவசாயம் ஓஹோனு நடந்துச்சு. இப்ப மழைக்காலத்துல மட்டும்தான் நெல் சாகுபடி நடக்குது. ஊருக்கு வெளியே கரட்டுப் பக்கமா இருக்கிற காடுகள்ல சோளம், கம்பு, கானைனு (கொள்ளு)புன்செய்ப் பயிர்களைத்தான் போடுவாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick