தேசிய அளவில் போராட்டம்... அய்யாக்கண்ணு அதிரடி!

நாட்டுநடப்புத.ஜெயகுமார்

றட்சி நிவாரணம், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தார், தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு. 41 நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அய்யாக்கண்ணுவைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சந்தித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டார், அய்யாக்கண்ணு.

தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம், கடையடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. தாமாகவே முன்வந்து பொதுமக்களும் வணிகர்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனாலும், மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதற்குப் பின் நடந்த ஒரே விஷயம், தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை இல்லையென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்ததுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick