மரபணு கடுகுக்கு அனுமதி... - மான்சான்டோவுக்கு மரியாதை!

பிரச்னை துரை.நாகராஜன்

‘ஜி.இ.ஏ.சி’ (GEAC-The Genetic Engineering Appraisal Committee) என அழைக்கப்படும் ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’ சமீபத்தில், ‘மரபணு மாற்று கடுகுக்கு அனுமதி வழங்கலாம்’ என மத்திய சுற்றுச்சூழல் துறைக்குப் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் மரபணு மாற்று கடுகுக்கு அனுமதி கிடைத்து, விளைநிலங்களை ஆக்கிரமிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

கடந்த காலங்களில் பி.டி பருத்திக்கு அனுமதி வழங்கப்பட்டு அதனால், விவசாயிகள் அனுபவித்த துன்பங்கள் அனைவரும் அறிந்ததே. காங்கிரஸ் ஆட்சியின்போது, பி.டி கத்திரிக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடுகுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அதுதான், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் உணவுப்பொருளாக இருக்கும்.

இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, “இம்முறை மரபணு மாற்று கடுகைக் கொண்டு வருவதற்கான முழுமுயற்சியுடன் மத்திய அரசு இறங்கியிருப்பது, தெளிவாகத் தெரிகிறது. ஜி.இ.ஏ.சி தங்களது அறிக்கையைச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துவிட்டது. தற்போது, அனுமதி அளிப்பதற்கான அதிகாரம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குத்தான் உண்டு. மரபணு மாற்று கடுகைக் கொண்டுவர, மத்திய அரசு மூன்று காரணங்களை முன் வைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick