கடும் வெயில்... கால்நடைகள் கவனம்! | Heavy sunshine alert Livestock - Pasumai Vikatan | பசுமை விகடன்

கடும் வெயில்... கால்நடைகள் கவனம்!

கால்நடைதுரை.நாகராஜன்

ழைக்காலத்தைவிட கோடைக்காலத்தில்தான் கால்நடைகள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. ஆண்டு முழுவதும் நமக்காக உழைக்கும் கால்நடைகளுக்குக் கோடைக்காலத்தில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் கடமை. அந்த வகையில், கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், பராமரிக்கும் முறைகள் குறித்துச் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் நிஷா.

“கோடைக்கால வெயிலின் தாக்கம் கால்நடைகளை அதிகமாகவே  பாதிக்கிறது. இக்காலங்களில் கறவை மாடுகள் சரியாகத் தீவனம் எடுத்துக்கொள்ளாமல், தண்ணீரைத்தான் அதிகமாகக் குடிக்கிறது. அதனால், மாடுகளின் வளர்ச்சி பாதிக்கும். ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படும். பால் உற்பத்தியும் குறையும். பருவத்துக்கு வருவதிலும் சிக்கல் ஏற்படும். பருவத்துக்கு வந்த மாடுகளுக்குச் சினைபிடித்தலில் சிக்கல் ஏற்படும். இயல்பாகவே வியர்வை நாளங்கள் குறைவாகக் கொண்டுள்ள எருமைகள் கோடையில் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. இவற்றின் தோல் கறுப்பாக இருப்பதால், சூரியக் கதிர்வீச்சுகளால் அதிக பாதிப்படைகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick