நஞ்சில்லா உணவு... நோயில்லா வாழ்க்கை... மாடித்தோட்டத்தின் மகத்துவம்!

மாடித்தோட்டம்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

யற்கை உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது என்பதற்கு நேரடிச் சாட்சி, நகரங்களில் பெருகி வரும் வீட்டுத்தோட்டங்கள்தான். தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகளவில் மாடித்தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்பு உணர்வு பெருகி வருவதில் ‘பசுமை விகடன்’ இதழுக்கும் முக்கியப் பங்குண்டு. மாடித்தோட்டம் அமைக்கும் விதம் குறித்துச் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கிறது, பசுமை விகடன். அதோடு, மாடித்தோட்டம் அமைத்துள்ளவர்களின் அனுபவங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது, பசுமை விகடன்.

அந்த வகையில், ஈரோடு காசிபாளையம் பகுதியில் மாடித்தோட்டம் அமைத்துக் கீரை, காய்கறிகள், மூலிகைகள் எனச் சாகுபடி செய்து வரும் வி.சுப்பிரமணியின் அனுபவங்கள் இங்கே இடம்பெறுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick