1 ஏக்கர்... ரூ 3 லட்சம் லாபம் - வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி!

மகசூல் இ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்

மிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். மழை இல்லாததால், ஆறுகளில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றில் தண்ணீர் இல்லை.

இந்நிலையில், ‘கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப சாகுபடிப் பரப்பைக் குறையுங்கள். இல்லையேல், குறைவான தண்ணீர்த் தேவைப்படும் பயிருக்கு மாறுங்கள்’ என்பதுதான் நீர் மேலாண்மை வல்லுநர்களின் ஆலோசனையாக இருக்கிறது. காலத்தின் கட்டாயத்தால், பல விவசாயிகள் இக்கோட்பாட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிவபிரசாத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick