மரம் செய விரும்பு! - 9 - மலைகளைக் காக்கும் ஊசியிலை மரங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுற்றுச்சூழல் ‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன்

லகெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் தனித்துவமான குணத்தைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற மரங்கள் வளர்கின்றன. பாலைவன நிலங்கள், பனிப்பிரதேச நிலங்கள், சதுப்பு நிலங்கள், தரிசு நிலங்கள்... எனச் சூழலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வகை நிலத்திலும் மரங்கள் வளர்கின்றன. அந்த வகையில், அதிக பனி பெய்யும் மலைப்பிரதேசங்களில் வளர்பவை ‘ஊசியிலை மரங்கள்’ என அழைக்கப்படுகின்றன.

உலகில் உயரமாக வளரக்கூடிய மரவகைகளில் ஊசியிலை மரங்களும் ஒன்று. இந்த வகை மரங்களின் தண்டுப்பகுதி உயரமாக மேல்நோக்கி வளர்ந்து, கீழ்நோக்கி கிளைகளைப் பரப்பும் தன்மை கொண்டது. இந்த மரங்கள் முந்நூறு அடி உயரத்துக்குமேல் வளரக்கூடியவை. இவ்வளவு உயரமாக மரம் வளர்வதால், வேரினால் உறிஞ்சப்படும் நீர், உச்சி வரை செல்வதில்லை. இதனால் உச்சிப்பகுதி குறுகி, ஊசிமுனைபோலக் காணப்படும். இந்த ஊசிமுனைகள், மரத்தில் படியும் பனியை, இலையில் தேக்கிவைத்து உறிஞ்சிக் கொள்ளும். இதனால்தான் பனிப் பிரதேசங்களிலும் இந்த வகை மரங்கள் வளர்கின்றன.

தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் ஊசியிலை மர வகைகள் வளர்வதற்கான சூழ்நிலை இருப்பதைக் கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள். அதற்கு முன்பாக, புல்தரைகள் நிரம்பிய மலைகளாகத்தான் கொடைக்கானலும்  ஊட்டியும் இருந்தன. இந்தப் பகுதிகளில் ஆங்கிலேயர்களால் நடப்பட்ட ஊசியிலை மர வகைகள் பெருகி, தற்போது மலைப்பகுதிகள் முழுவதும் இம்மரங்கள்தான் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தின் உயரமான  சரிவுப்பகுதிகளில் குளிர்கால வெப்பநிலை, உறைநிலைக்குச் செல்கிறது. கோடைக்கால வெப்பநிலையும் அதிகமாக இருப்பதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick