விளைச்சலை அள்ளிக் கொடுக்கும் ஜீவாமிர்தம்... பாசன முறையில் புதுமை!

தொழில்நுட்பம்த.ஜெயகுமார் - படங்கள்: கா.முரளி

ஜீரோ பட்ஜெட் வேளாண்மையில் முக்கியமான இடுபொருள் ஜீவாமிர்தம். பொதுவாக, 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரலில் ஜீவாமிர்தத்தைத் தயார் செய்து பாசன தண்ணீருடன் கலந்து வயலுக்குப் பாய்ச்சுவார்கள். இதை வயலில் ஒவ்வோர் இடத்துக்கும் எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கும். பொதுவாக இடுபொருள் தயாரிப்புக்கு, அதிகாலையில் நாட்டு மாடுகள் கழிக்கும் முதல் சிறுநீர்தான் ஏற்றதாக இருக்கும். இப்படி அதிகாலையில், மாடுகளின் சிறுநீரைச் சேகரிப்பதும் சிரமமான விஷயம்தான். இந்தச் சிரமங்களைக் களையும் வகையில்... சிறுநீர்ச் சேகரிப்பு, ஜீவாமிர்தம் தயாரிப்பு, பாசனம் செய்தல் மூன்றையும் ஒருங்கிணைத்து எளிமையான முறையை வடிவமைத்திருக்கிறார்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.எஸ்.மணி, தரணிவேந்தன் இருவரும்.

இவர்களது வயல், ஆரணி-ஆற்காடு சாலையில், நான்காவது கிலோ மீட்டரில் இரும்பேடு கிராமத்தில் உள்ளது. காலைப்பொழுதிலேயே சுள்ளென்று வெயில் அடித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், வயலுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சி கொண்டிருந்தனர், மணியும் தரணிவேந்தனும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick