தமிழ்நாட்டில்... பைசா செலவில்லாத பசுமைப் புரட்சி!

வரலாறுபசுமைக் குழு

‘ரசாயன உரங்கள் வேண்டாம்... பூச்சிக்கொல்லிகள் வேண்டாம்... நுண்ணுயிர் உரங்கள் வேண்டாம்... பண்ணைக்குள் இருக்கும் பொருள்களும் கழிவுகளுமே போதும். மண்ணை வளமாக்கி நல்ல மகசூல் எடுக்க முடியும்’ என்ற எளிய சித்தாந்தம், தமிழக விவசாயத்தில் மாபெரும் வேளாண் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை யெல்லாம், உரக்கடைகளில் கொண்டுபோய்ப் படியளந்துகொண்டிருந்த தமிழக விவசாயிகளுக்கு, ‘உங்கள் மாடே ஓர் உரத் தொழிற்சாலைதான்’ என்ற குரல் ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டுப் பசு மாட்டின் சாணத்தையும் சிறுநீரையும் மட்டுமே பயன்படுத்தியதில் பயிர்களின் பல்வேறு சிக்கல்கள் தீர்ந்துபோனபோது, ஆனந்தத்தின் உச்சிக்கே போனார்கள் விவசாயிகள். அதுவரை விவசாயிகளுக்குப் பெரும் சுமையாக இருந்த முட்டுவளிச் செலவு என்ற சாகுபடி செலவை உடைத்தெரிந்தது புதிய சித்தாந்தம். ஆம், இத்தனை அற்புதங்களையும் நிகழ்த்திய அந்தச் சிந்தாந்தம்தான், ‘பைசா செலவில்லாத சாகுபடி’ என்றழைக்கப்படும் ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம்.

மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த ‘வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் கண்டறிந்ததுதான் ஜீரோ பட்ஜெட் சாகுபடி முறை. அடிப்படையில் வேளாண் பட்டதாரியான சுபாஷ் பாலேக்கர், தனது சித்தாந்தத்தை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பரப்பிக்கொண்டிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick