பால் கலப்படம்... அமைச்சர் சொல்வது சரியா?

பிரச்னைதுரை.நாகராஜன்

சில நாள்களுக்கு முன்பு, ‘தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனத்தைக் கலந்துவிடுகின்றன. அதனால்தான், அந்தப் பால் நீண்ட நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கிறது’ எனத் தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார், தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  அமைச்சரே இப்படி வெளிப்படையாகப் பேசியது, பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தின. இந்தச் சூழ்நிலையில்... தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தன. ஆனாலும், ராஜேந்திர பாலாஜி தன் கருத்தைப் பின் வாங்காமல், இன்னும் அழுத்தமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதோடு, ‘தனியார் பாலில் கலப்படம் இருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பால் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள் கலந்திருப்பதும் அடுத்தடுத்த ஆய்வுகளின் மூலம் வெளிவர உள்ளது. தனியார் நிறுவனங்களின் பாக்கெட் பாலில் கலப்படம் இல்லை என நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார்’ எனச் சவால் விட்டுள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick