5 ஏக்கர்... மாதம் ரூ 1 லட்சம் வருமானம்... ஜெயிக்க வைத்த ஜீரோ பட்ஜெட் மல்பெரி

மகசூல் ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் முக்கியமான விவசாய உபதொழில், பட்டுப்புழு வளர்ப்பு. இதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் தாவரம் மல்பெரி. இத்தாவரத்தின் இலைகள்தான் பட்டுப்புழுக்களுக்கான உணவு. மல்பெரி சாகுபடி செய்ய, பட்டு வளர்ப்புத்துறை பெரும்பாலும் ரசாயன உரங்களையே பரிந்துரைத்தாலும், அதை இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்பவர்களும் உண்டு. அந்த வகையில், ஜீரோ பட்ஜெட் வேளாண்மை முறையில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தம்-புஷ்பலதா தம்பதி.

உடுமலைப்பேட்டை வட்டம், சுங்காரமடக்கு கிராமத்தில் நித்தியானந்தம், புஷ்பலதா ஆகியோர் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு முற்பகலில் அவர்களின் வயலுக்குள் நுழைந்தோம். சொட்டுநீர்ப் பாசன உரத்தொட்டியில் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துகொண்டிருந்த நித்தியானந்தம் நம்மை மகிழ்ச்சியாக வரவேற்றார். அவரின் மனைவி புஷ்பலதா நாட்டுப் பசும்பாலில் தயாரித்த தேநீர் கொடுத்து உபசரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick