ரூ 1 லட்சம் வருமானம்... வாழைக்கு இடையில் காய்கறிகள்... ஊடுபயிர்கள் கொடுக்கும் உன்னத லாபம்! | Intercropping vegetables with Banana Cultivation - Pasumai Vikatan | பசுமை விகடன்

ரூ 1 லட்சம் வருமானம்... வாழைக்கு இடையில் காய்கறிகள்... ஊடுபயிர்கள் கொடுக்கும் உன்னத லாபம்!

மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

விவசாயத்தில் ஊடுபயிர், கலப்புப் பயிர் சாகுபடி மிகவும் அவசியம். அதுவும், ஓர் ஆண்டு கழித்துப் பலன் கொடுக்கும் வாழை போன்ற பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம், பிரதான பயிர் மகசூல் கொடுக்கும் முன்னரே, ஊடுபயிர் மூலம் ஒரு வருமானம் பார்த்துவிட முடியும்.

ஜீரோ பட்ஜெட் வேளாண்மை முறையிலும், பிரதான பயிர்களுக்கு ஏற்ற பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்ய வேண்டும் என சுபாஷ் பாலேக்கர் வலியுறுத்தி வருகிறார். அதைக் கடைப்பிடிக்கும் வகையில், நாடன் ரக வாழைக்கு ஊடுபயிராக, காய்கறிகளை ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம்.

தூத்துக்குடி மாவட்டம், சோனகன் விளையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேலக்கானம் கிராமத்தில், ராஜமாணிக்கத்தின் வாழைத்தோட்டம் உள்ளது. காய்களை அறுவடை செய்து கொண்டிருந்த ராஜமாணிக்கத்தைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick