வறட்சிக்கு ஏற்ற மூடாக்கு... கைகொடுக்கும் உயிர் உரங்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்!இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் தொகுப்பு: ரா.கு.கனல்அரசு

ந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்பட கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டி ருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம்.

நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது, இயற்கை.

ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நுண்ணுயிர்களைப் பற்றிய புரிதலே இந்தத் தொடர்.

ஒரு சென்ட் நிலத்தில் ஆண்டுக்கு 80 டன் தொழுவுரம் தயாரிக்கும் முறை பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். அதன்படி தயாரித்த இயற்கை உரத்தை நிலக்கடலை, சூரியகாந்தி, எள் போன்ற பயிர்களுக்கும், காய்கறி பயிர்களுக்கும் ஏக்கருக்கு 5 டன் அளவு பயன்படுத்தலாம். வாழை, கரும்பு போன்ற ஆண்டுப் பயிர்களுக்கு ஏக்கருக்கு 10 டன் அளவு இட வேண்டும்.

இயற்கை உரத்தை நிலத்தில் தூவி, உழவு செய்த பிறகே விதைக்க வேண்டும். இந்த உரத்தை இடுவதால், மண்ணில் அங்ககப் பொருள்களின் அளவு அதிகரிக்கிறது. நுண்ணுயிர்களும் அதிகளவில் பெருகி, கரிமப்பொருள்கள் அதிகரிக்கின்றன. மண்ணின் நீர் பிடிப்புத்தன்மை மேம்படும். தற்போதைய வறட்சிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மண்ணில் அங்ககப்பொருள்களின் அளவு குறைந்ததும் ஒரு முக்கியமான காரணமாகும். அங்ககப் பொருள்கள் அதிகளவில் இருக்கும் மண்ணில், நீர் ஆவியாகும் வேகம் குறைவாக இருக்கும். ரசாயனம் பயன்படுத்தும் நிலங்கள் அதிவிரைவாக வறண்டுவிடும். ஆனால், இயற்கை இடுபொருள்கள் பயன்படுத்தும் நிலங்கள் விரைவில் வறண்டு போவதில்லை. இதற்கு, மண்ணில் உள்ள இந்த அங்ககப் பொருள்கள்தான் காரணம்.

மண் வறண்டு போகாமல் ஈரத்தன்மையுடன் இருப்பதால் பல்வேறு வகையான நுண்ணுயிர்கள் உருவாகி நிலத்தை வளமாக்குகின்றன. ஆக, இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது, நாம் மண்ணில் இடும் இயற்கை உரங்கள்தாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick