மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்! | Marathadi manadu - Pasumai Vikatan | பசுமை விகடன்

மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஹரன்

தோட்டத்தில் வரப்போர பனை மரத்தடியில் அமர்ந்திருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். நாளிதழ்கள் சகிதமாக மிதி வண்டியில் வியர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. குறுக்குப்பாதையில் ‘காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர அங்கேயே அன்றைய மாநாடு கூடியது.

ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.

“தென்னை விவசாயிகள் ரொம்ப நாளா கள் இறக்குறதுக்கு அனுமதி கேட்டுப் போராடிட்டு இருக்கிறாங்க. ஆனா, கள்ளுக்குப் பதிலா ‘நீரா’ இறக்க அனுமதி கொடுக்கலாம்னு தமிழக அரசு முடிவு செஞ்சிருக்கு” என்று வாத்தியார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்த காய்கறி,  “அதென்ன நீரா?’’ என்று கேட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick