சர்க்கரை ஆலை... கழிவுநீரிலும் கனமான விளைச்சல்! - இயற்கை முறையில் சுத்திகரிப்பு!

நீர் மேலாண்மைத.ஜெயகுமார் - படங்கள்: அ.சரண்குமார்

ண்மைக் காலங்களில் வறட்சி மூலம் இயற்கை நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இனிமேலாவது நாம் விழித்துக்கொண்டு முறையான நீர் மேலாண்மையைக் கையில் எடுத்தால்தான் எதிர்காலத்தில் விவசாயம் செய்ய முடியும். மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துவதும், கிணறு, ஆழ்துளைக்கிணறு போன்றவற்றில் இருக்கும் நீரைக் குறைவாகப் பயன்படுத்துவதும் மட்டும் நீர் மேலாண்மையல்ல. கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதும் நீர் மேலாண்மைதான். நம் நாட்டில் சமீபகாலமாகத்தான் மறுசுழற்சி குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. அந்த வகையில், சர்க்கரை ஆலைக் கழிவுநீரை இயற்கை முறையிலேயே சுத்திகரித்து விவசாயத்துக்குப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்து, அதில் வெற்றி கண்டிருக்கின்றனர், ‘எம்.எஸ்.சுவாமிநாதன் ஃபவுண்டேஷன்’ அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick