நட்டமில்லா வருமானம் கொடுக்கும் நாட்டுக் கோழிகள்... | Poultry farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

நட்டமில்லா வருமானம் கொடுக்கும் நாட்டுக் கோழிகள்...

கால்நடை துரை.நாகராஜன், படங்கள்: ஸ்ரீனிவாசலு

லாபகரமாக விவசாயம் செய்வதற்கு முதலில் வல்லுநர்கள் பரிந்துரைப்பது, கால்நடை வளர்ப்புதான். அவற்றிலும் குறைந்த தண்ணீர் வளம் மட்டுமே உள்ள விவசாயிகளுக்குக் கைகொடுப்பது, கோழி வளர்ப்பு. தற்போது பிராய்லர் கோழிகளை உண்பதால் நேரும் கெடுதல்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், நாட்டுக்கோழிகளுக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சந்தை வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதால், விவசாயிகள் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்.

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் வெண்ணாங்குபட்டுக் கிராமத்தில் உள்ளது தமிழ்ச்செல்வனின் பண்ணை. ஒரு காலை வேளையில் தமிழ்ச் செல்வனின் பண்ணைக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

“அப்பா, தாத்தா எல்லாம் விவசாயம்தான் செஞ்சாங்க. நான் சின்ன வயசுல இருந்தே, அவங்களுக்கு உதவியா இருப்பேன். கல்லூரிப் படிப்பு முடிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். 1994-ம் வருஷத்துல இருந்து விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன். 2001-ம் வருஷம் கோழி வளர்க்கலாம்னு ஆசைப் பட்டு, ஒரு பண்ணையோட ஒப்பந்தம் செஞ்சு, பிராய்லர் கோழிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். 2012-ம் வருஷம் ஒப்பந்தம் போட்ட பண்ணையோட சில பிரச்னைகள் வந்துடுச்சு. அதனால, பிராய்லர் வளர்ப்பை கைவிட்டுட்டேன்” என்றவர் தொடர்ந்தார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick