தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்
 
தேனீ வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மே 24-ம் தேதி, ‘சிப்பி மற்றும் பால்காளான் தொழில்நுட்பங்கள்’, 25-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள்’, 26-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

கறவை மாடு வளர்ப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 17-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 18-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 24-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903.

நாட்டுக்கோழி வளர்ப்பு


சேலம் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick