இணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள்! - ஐவர் அணியின் அரிய பணி!

நீர்நிலைஎம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: க.தனசேகரன், நியாஸ்அகமது

டுமையான வறட்சி நிலவி கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஏரி, குளங்கள், வரத்துக் கால்வாய்கள் போன்றவற்றை இப்போதே தயார் செய்தால்தான், எதிர்வரும் காலங்களைச் சமாளிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்காகத் தமிழகம் முழுவதுமே, மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனுக் கொடுத்து வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில், ‘அரசாங்கத்தை நம்பினால், வேலையாகாது’ என்று முடிவெடுத்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சில விவசாயிகள், தங்கள் சொந்த முயற்சியில் ஒரே மாதத்தில் ஆறு ஏரிகளைத் தூர்வாரியிருக்கிறார்கள்.

“நாங்க பேப்பர்ல திட்டம் தீட்டுறதுல்ல. நேரடியா செயல் மட்டும்தான். எப்படி இது சாத்தியமாச்சுனு எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு. வேலை செய்யணும்னு முடிவு பண்ணினதும் எங்க பணத்தைப் போட்டே வேலைகளை ஆரம்பிச்சிட்டோம். ஃபேஸ்புக் மூலமா பல நண்பர்கள் உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதனாலதான் மளமளனு வேலை நடந்துகிட்டு இருக்கு” என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள், தருமபுரி மாவட்டம், பி.துரிஞ்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச்செழியன், ரவிக்குமார், கிருஷ்ணன் மற்றும் ஜங்காளப்பட்டியைச் சேர்ந்த அருண், அகிலன் ஆகிய ஐந்துபேரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick