மானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை!

திட்டம்த.ஜெயகுமார் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், கா.முரளி

சிறுதானியங்களைப் பற்றிய விழிப்பு உணர்வு நாளுக்கு நாள் பெருகி வருவதால், அதன் தேவை அதிகரித்து வருகிறது. அதனால், உற்பத்தியையும் பெருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் வேளாண்மைத் துறை சிறுதானியங்களின் உற்பத்தியைப் பெருக்கப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தற்போது மானாவாரி விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நீடித்த, நிலையான மானாவாரி வேளாண்மைக்கான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள் மற்றும் பருத்தி ஆகியவை இத்திட்டத்தில் இடம் பிடிக்கின்றன.

இத்திட்டங்கள் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick