கொச்சிச் சம்பா... நாஞ்சில் நாட்டின் நாட்டு ரக நெல்!

1 ஏக்கர் 25 சென்ட்... ரூ 72,640 லாபம்!மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ரா.ராம்குமார்

* வயது: 135 முதல் 150 நாள்கள். 

* அனைத்து வகையான மண்ணிலும் வளரும்.

* ஆவணி - புரட்டாசி பட்டங்கள் ஏற்றது.

* ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்.


“விதைத்தவனே விலை நிர்ணயம் செய்ய முடியும் என்பது இயற்கை விவசாயத்தில் மட்டுமே சாத்தியம். அதுவும் பாரம்பர்ய நெல் ரகச் சாகுபடியில் நாம் நிர்ணயிக்கும் விலைக்கே விற்க முடிகிறது” என்று அடித்துச் சொல்கிறார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஸ்ரீகிருஷ்ணபெருமாள். கடந்த நான்கு ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பர்ய நெல் ரகங்களான கட்டிச்சம்பா, கொச்சிச்சம்பா ஆகிய ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார். நாகர்கோவிலிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புத்தளம் கிராமத்தில்தான் ஸ்ரீகிருஷ்ணபெருமாளின் நெல் வயல் உள்ளது. ஒரு காலைவேளையில் அவரது வயலுக்குச் சென்றோம். அறுவடைப்பணியில் இருந்த கிருஷ்ணபெருமாளிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

“விவசாயம்தான் பரம்பரைத் தொழில். பி.யூ.சி வரை படிச்சுட்டு, அப்பாவுக்கு உதவியா விவசாயத்துல இறங்கிட்டேன். அப்பா காலத்துல ரசாயன உரமோ பூச்சிக்கொல்லியோ உபயோகப்படுத்த மாட்டோம். மட்கின தொழுவுரம் மட்டும்தான் போடுவோம். அப்போ அதிகளவுல பூச்சி, நோய்த்தாக்குதல்களெல்லாம் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick