இன்றைய கன்று... நாளைய ‘பணம் தரும்’ பசு!

சினை மேலாண்மை பற்றி பேசும் குறுந்தொடர்கால்நடை முனைவர் க.கிருஷ்ணகுமார், தொகுப்பு: த.ஜெயகுமார், படங்கள் ரா.திலீப்குமார்

னைத்துச் சூழ்நிலைகளிலும் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் உபதொழில் கால்நடை வளர்ப்புதான். அதிலும் கறவை மாடு வளர்ப்பு பெரும்பாலான விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவி செய்துவருகிறது. ஆனாலும், கறவை மாடு வளர்ப்பில் முறையான மேலாண்மை இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் குறைவான லாபம்தான் ஈட்டி வருகிறார்கள். கறவை மாடு வளர்ப்பில் சரியான நேரத்தில் சினைப்பிடிக்க வைப்பது முக்கியமான விஷயம். சரியான நேரத்தில் சினைப்பிடிக்க வில்லையென்றால் பெரிய நஷ்டம் உண்டாகும். பால்மூலம் கிடைக்கும் வருமானம், அதற்காக நாம் செய்யும் செலவு ஆகியவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். ஆனால், மாடு சினைப்பிடிக்காமல் காலதாமதமாவதால் ஏற்படும் நஷ்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick