மரம் செய விரும்பு! - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுற்றுச்சூழல் ‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன், படம்: வீ.சிவக்குமார்

சித்துக் கிடந்த பயிர்களுக்கு உயிர் உணவாக, வறண்டு கிடந்த நிலங்களுக்குத் தாகம் தீர்க்கும் நீராக... மனம் குளிர நீர் வார்த்துச் சென்றுள்ளது தென்மேற்குப் பருவமழை. பல பகுதிகளில் கன மழையாகவும் சில பகுதிகளில் மித மழையாகவும் பெய்ந்துள்ளது. நீண்டகால வறட்சியை விரட்டியடித்த தென்மேற்குப் பருவமழைக்கு நன்றி சொல்லி, அடுத்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்கு வரவேற்பு கொடுக்கத் தயாராகுவோம்.

‘அடுத்து பெய்யவிருக்கும் வடகிழக்குப் பருவமழை, சராசரி அளவைவிடக் கூடுதலாகக் கிடைக்கலாம்’ என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, விவசாயிகள் தங்களின் தரிசு நிலங்களிலும் காலி இடங்களிலும் மரக்கன்றுகளை வைக்க வேண்டும். மரக்கன்றுகள் நடுவதற்கு இது சரியான தருணம். கடுமையான வறட்சியைத் தாங்கி வளரும் சில வகை மரங்களைத் தரிசு நிலங்களில் நட்டு வைத்தால், அடுத்த மழையில் செடிகள் உயிர் பிடித்துக்கொள்ளும். வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்துவரும் பனிக்காலத்தில் செடிகள் ஓரளவு தங்களைத் தக்க வைத்துக்கொள்ளும். எனவே மரக்கன்றுகள் நடவுசெய்ய நினைப்பவர்களுக்கு, இது அற்புதமான காலம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick