பால் கொடுக்கும் ‘பலே’ வருமானம்! - உழவர்களை உயர்த்தும் உற்பத்தியாளர் நிறுவனம்!

பால் வளம்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

ரியாகப் படிக்காத மாணவர்களை ஆசிரியரும் பெற்றோரும் ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று திட்டுவதைப் பார்த்திருப்போம். ஆனால், மாடுகளை மேய்த்துப் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை. கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் தற்சார்பாக வாழ இரண்டு கறவை மாடுகளே போதுமானவையாக இருக்கின்றன. உறவுகள், நட்புகள், சமூகம் என எவற்றாலும் கிட்டாத பொருளாதாரப் பாதுகாப்பைப் பசு மாடுகள் உறுதிசெய்கின்றன. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நிலவிவரும் வறட்சியான சூழ்நிலையிலும், கிராமப் பொருளாதாரம் இன்னமும் உயிர்ப்போடு இருப்பதற்கு முக்கியக் காரணம் பால் மாடுகள்தான்.

அதே சமயத்தில் விளைபொருள்களை விற்பனை செய்யும்போது வியாபாரிகளாலும் இடைத் தரகர்களாலும் எப்படியெல்லாம் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனரோ, அதே அளவுக்குப் பால் உற்பத்திசெய்யும் விவசாயிகளும் ஏமாற்றப்படுகிறார்கள். தனியாருக்கு விற்பனை செய்யும்போது பாலுக்கான நியாயமான விலை கிடைப்பதில்லை. அளவு, விலை எனப் பல விஷயங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நாடு முழுவதும் இதேநிலைதான் இருந்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick