விவசாயிகளின் உயிரைக் குடித்த பூச்சிக்கொல்லி... மகாராஷ்டிராவில் நடக்கும் கொடூரம்!

பிரச்னைத.ஜெயகுமார், படம்: க.பாலாஜி

ழக்கமாக விவசாயத் தற்கொலைகள்தான் மகாராஷ்டிராவைக் கதிகலங்க வைக்கும். இந்தமுறை பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தியதால் 35 விவசாயிகள் இறந்திருப்பது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மகாராஷ்டிர மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா பகுதி பருத்திச் சாகுபடிக்குப் பெயர்பெற்றது. இந்தப் பகுதியில் பூச்சிக்கொல்லி விஷத்தை வயல்களுக்குத் தெளித்தபோது, அப்பாவி விவசாயிகளின் உயிரைப் பறித்துள்ளன நச்சு மருந்துகள். இந்தப் பூச்சிக்கொல்லி விஷம் தயாரித்த கார்டா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தின்மீது ஏமாற்றுதல் மற்றும் மனித உயிர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பொருள்களை விற்பனை செய்தல் என்ற சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு சின்ஜென்டா என்ற மருந்து கம்பெனியின்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick