ஒரு மணிநேர மழை... ஒரு கோடி லிட்டர் நீர் சேமிப்பு! - பட்டையைக் கிளப்பும் பண்ணைக்குட்டை!

நீர் மேலாண்மை ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.விக்னேஷ்வரன்

டந்த சில ஆண்டுகளாக நிலவிய கடுமையான வறட்சியால் பாடம் கற்றுக்கொண்ட நாம், இப்போதுதான் மழைநீர் சேமிப்பு, நீர் மேலாண்மை ஆகியவை குறித்துச் சிந்திக்க ஆரம்பித்துள்ளோம். மழைநீர் சேமிப்பில் பெரிய பங்கு வகிப்பது பண்ணைக்குட்டை. பண்ணைக்குட்டை அமைப்பது குறித்துக் கருத்தரங்குகள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் தொடர்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறது ‘பசுமை விகடன்’. அதனால், பல விவசாயிகள் தங்கள் நிலங்களில் பண்ணைக்குட்டைகளை அமைத்து மழை நீரைச் சேகரித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அடுத்துள்ள சின்னக்கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஞானசுந்தர்.

தன்னுடைய நிலத்தில் 1 கோடியே 25 லட்சம் லிட்டர் கொள்ளளவுகொண்ட பண்ணைக்குட்டையை அமைத்து, அதில் தளும்பத் தளும்பத் தண்ணீரைச் சேகரித்து வைத்திருக்கிறார் ஞானசுந்தர்.

ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள்கொண்ட தோப்பின் ஒரு பகுதியில் வீராணம் ஏரிபோல விரிந்து கிடந்தது பண்ணைக்குட்டை. அதிலிருந்த தண்ணீரை மோட்டார்மூலம் தென்னைக்குப் பாய்ச்சிக்கொண்டிருந்த ஞானசுந்தரைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick