ஒரு ஏக்கர்... ரூ.4 லட்சம்... செழிப்பான லாபம் கொடுக்கும் செவ்வாழை! | Profitable Red Plantain farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

ஒரு ஏக்கர்... ரூ.4 லட்சம்... செழிப்பான லாபம் கொடுக்கும் செவ்வாழை!

மகசூல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

ண்ணீர் வளம், மண்ணின் தன்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ற பயிர்களைக் கண்டுபிடித்து, அவற்றைச் சாகுபடி செய்தால்தான் செழிப்பான விளைச்சல் எடுக்க முடியும். அப்படித் தேர்ந்தெடுக்கும் பயிர், அருகிலுள்ள சந்தையில் தேவையிருக்கும் பொருளாக அமைந்துவிட்டால், விவசாயத்தில் தோல்வி என்பதே கிடையாது. இப்படிச் சாதுர்யமாகச் செயல்படும் விவசாயிகள்தான் மிக எளிதாக லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள மூக்கப்புடையான்பள்ளம் கிராமத்தில்தான் நாகராஜனின் நிலம் உள்ளது. அறுவடை செய்த வாழைத்தார்களை வரிசையாக அடுக்கிக்கொண்டிருந்த நாகராஜனைச் சந்தித்துப் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick