2 ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.47 ஆயிரம்... - கைகொடுத்த கறுப்பு கானம்! | Profitable Horse gram yielding farmer near Virudhunagar - Pasumai Vikatan | பசுமை விகடன்

2 ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.47 ஆயிரம்... - கைகொடுத்த கறுப்பு கானம்!

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

‘இளைச்சவனுக்கு எள்ளு... கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்று கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள். உடல் மெலிந்தவர்கள் எள்ளைச் சாப்பிட்டால் உடல் பெருக்கும். உடல் பெருத்தவர்கள் கொள்ளுவைச் சாப்பிட்டால் உடம்பு இளைக்கும் என்பதுதான் இந்தச் சொலவடையின் அர்த்தம். கடினமாக வேலை செய்பவர்கள் தினமும் உணவில் கொள்ளுவைச் சேர்த்துக்கொண்டால், எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் பலம் கிடைக்கும்.

இதனால்தான் நம் முன்னோர் இதை உணவாகப் பயன்படுத்திவந்துள்ளனர்.  மானாவாரிப் பயிர்களில் அதிக வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதில் கொள்ளும் ஒன்று. அதனால்தான் பெரும்பாலான மானாவாரி விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது கொள்ளு.

இதை விருதுநகர், தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் ‘கானம்’ என்று அழைக்கிறார்கள். கொள்ளின் ஒரு வகையான கறுப்புக் கொள்ளுவை மானாவாரியாகச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்திருக்கிறார் விருதுநகர் மாவட்டம், பாஞ்சார் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick