தண்டோரா

அறிவிப்பு - பசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

பால் பொருள்கள் தயாரித்தல்

சென்னையை அடுத்த அலமாதி, கோடுவெளியில் உள்ள தமிழ்நாடு உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 5, 19 ஆகிய தேதிகளில் ‘மதிப்பூட்டிய பால் பொருள்கள் தயாரித்தல்’ டிசம்பர் 7-ம் தேதி ‘தானியங்கி பால் சேகரிப்பு நிலையத்தின் செயல்முறை மற்றும் பராமரிப்பு’, 8-ம் தேதி ‘உணவு மற்றும் பால் பதனிடுவதற்கான சிறுகருவிகளை உருவாக்குதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94451 99034.

வெங்காயச் சாகுபடி

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 13-ம் தேதி ‘வேளாண் காடுகளுடன் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு’,  14-ம் தேதி ‘சின்ன வெங்காயம் சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, 16-ம் தேதி ‘கால்நடை வளர்ப்பில் சிகிச்சை முறைகள்’,

20-ம் தேதி ‘தானியங்களில் பூச்சி மேலாண்மை’, 21-ம் தேதி ‘வெண்பன்றி வளர்ப்பு’, 27-ம் தேதி ‘விரால் மீன் வளர்ப்பு’, 28-ம் தேதி ‘மண்வள மேம்பாடு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345

கன்று வளர்ப்பு

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 14-ம் தேதி ‘கன்று வளர்ப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.

ஆடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 14-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ 21-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 28-ம் தேதி ‘கால்நடைத் தீவன மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249

சுருள்பாசி உரை!

சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதி வித்யாபவன் சிற்றரங்கத்தில் நவம்பர் 24-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ‘தோள்கள் நமது தொழிற்சாலை’ எனும் தலைப்பில் சுருள்பாசி  தொழில் வாய்ப்புகள் குறித்த  கருத்துரை நிகழ்ச்சி  நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick