மரம் செய விரும்பு! - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன், படங்கள்: தி.விஜய்

டகிழக்குப் பருவ மழையைப் பயன்படுத்தித் தரிசு நிலங்களிலெல்லாம் மரங்கள் வளர்க்கும் விதம் பற்றிக்கடந்த இதழில் பார்த்தோம். அந்தக்கட்டுரை வெளியான பிறகு, பலரும் என்னைத் தொடர்புகொண்டு... ‘மரக் கன்றுகளை எப்படித் தேர்வு செய்வது’ என்று கேட்டு வருகிறார்கள். அவர்களுக்காகச் சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

பயன்பாடு, வளரும் சூழல், மண்ணின் தன்மை, மழையளவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மர வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ‘இந்த மரத்தை நட்டால் லட்சக்கணக்கில் பணம் பார்க்கலாம். கோடிகோடியாகக் கொட்டும்’ என்ற ரீதியில் வலை விரிப்பவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சதிகாரர்களின் சதுரங்கவேட்டைக்குப் பலியாகிவிடாமல், நமது பகுதியில் வளரும் மரக்கன்றுகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

விறகு, தீவன உற்பத்தி, சிறிய தடிகள், பெருமரங்கள், பழவகை மரங்கள்... எனப் பயன்பாட்டு அடிப்படையில் பிரித்து வைத்துக்கொண்டு, அவற்றில் நமக்கு எது தேவை என்று யோசித்து முடிவு செய்ய வேண்டும். இப்படித் தேர்வுசெய்த பிறகு உங்கள் பகுதியில் வளரக்கூடிய மர வகைகளை நட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick