பள்ளத்தில் மீன் வளர்ப்பு... மேட்டில் காய்கறிச் சாகுபடி!

குறுந்தொடர்-2பக்கத்து வயல், ஆர்.குமரேசன்

கோப்பையில் ஆறிப்போன தேநீரில் ஆங்காங்கே ஆடை படர்ந்து கிடப்பதுபோல, வங்காள விரிகுடா கடலில் பசுமைத் திட்டுகளாகப் படர்ந்து கிடக்கின்றன அந்தமான் தீவுப்பகுதிகள். பார்க்கப் பார்க்கத் திகட்டாத அழகான அந்தத் தீவுக்கூட்டங்களுக்குள், பல ஆபத்துகளும் மறைந்திருக்கின்றன. கடலுக்கு நடுவே பசுமைக் கூடாரத்தை அமைத்துள்ள இயற்கை அன்னை, அந்தக் கூடாரத்துக்குள் கோடிக்கணக்கான உயிர்களைப் பாதுகாத்து வருகிறாள். சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில்... அந்தமான் தீவுக்கூட்டத்தின் தொன்மையை, அவற்றின் அமைதியை அழிக்கும் முயற்சிகளும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தனைக்கும் இடையில், அத்தீவுகளில் இயற்கை விவசாயம் சத்தமில்லாமல் நடைபெற்றுவருகிறது.

அந்தமானில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்கை வள மேலாண்மைத் துறையின் தலைவர் முனைவர் வேல்முருகனுடன், தீவில் வசித்துவரும் இயற்கை விவசாயிகளைச் சந்திக்கப் பயணமானோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick