நவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்! - அய்யாக்கண்ணு ஆவேசம்!

போராட்டம்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீக்‌ஷித்

விளைபொருள்களுக்கு லாபகரமான விலை, வங்கிக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து... தலைநகர் புதுடெல்லியின் வீதிகளில் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தினர் தமிழக விவசாயிகள். அவர்களைப் பெருந்துயரத்துக்கு உள்ளாக்கிப் பல வகைகளில் அச்சுறுத்தி விரட்டியது மத்திய அரசு. இனி, இந்த விவசாயிகள் டெல்லி பக்கமே வர மாட்டார்கள் என்று மத்திய அரசு நினைத்துக் கொண்டிருக்கையில்... ‘வருகிற நவம்பர் 20-ம் தேதி இந்தியளவில் விவசாயிகள் இணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்’ என அதிரடியாக அறிவித்துள்ளார் அகில இந்திய விவசாயிகள் போராட்டக் கூட்டமைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் அய்யாக்கண்ணு.

வலது கண் விழித்திரை பாதிக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சையில் இருக்கும் நிலையிலும்கூட, வீரியம் குறையாமல் பேசுகிறார் அய்யாக்கண்ணு. “29 மாநிலங்கள்ல இருக்குற விவசாயிகளையும் அணி திரட்டிக்கிட்டு இருக்கிறோம். அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300 விவசாயச் சங்கங்கள் எங்களோட கூட்டமைப்புல அங்கம் வகிக்குது.

எல்லா சங்கங்களுமே போராட்டத்துக்கான தயாரிப்புப் பணிகள்ல தீவிரமா இருக்கு. நவம்பர் 20-ம் தேதி நாங்க நடத்த இருக்குற முற்றுகைப் போராட்டம் நாடாளுமன்றத்தை நிலைகுலைய வைக்கும். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இதுல கலந்துக்கப் போறாங்க. எங்களை அலட்சியப்படுத்திய பிரதமர் மோடிக்குக் கண்டிப்பா பாடம் கற்பிப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick