தினமும் ₹ 1,700 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுப்பால்!

பால்வளம்துரை.நாகராஜன், படங்கள்: வ.யஷ்வந்த்

யற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகர்வோர் தேடி வாங்கத் துவங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் பாக்கெட் பாலைத் தவிர்த்து, கறந்த பாலை நேரடியாக வாங்குகிறார்கள்.

இதனால், விவசாயிகள் பலரும் நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த கதிரவன், சங்கர் ஆகியோர்.

திருவள்ளூர்- ஊத்துக்கோட்டைச் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ஒதப்பை கிராமம். இங்குதான் இவர்களின் மாட்டுப்பண்ணை இருக்கிறது. பண்ணையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த சங்கர் மற்றும் கதிரவன் ஆகியோரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் சங்கர். “நாங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷமா நண்பர்கள். ஸ்கூல்ல படிக்கிறப்ப இருந்தே ஒண்ணாத்தான் இருப்போம். படிப்பு முடிச்சு நான் அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அது எனக்குச் சரிப்பட்டு வரல. வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன். வந்து நான், கதிரவன், இன்னொரு நண்பர் மூணு பேரும் சேர்ந்து மாட்டுப்பண்ணை ஆரம்பிச்சோம். அந்த நண்பர் இப்போ வெளிநாடு போய்ட்டதால, நானும் கதிரவனும்தான் மாடுகளைப் பார்த்துக்கிறோம். ஆரம்பத்துல பாலை எங்களால விற்பனை செய்ய முடியல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick