வந்தது பருவமழை... கால்நடைகள் கவனம்!

கால்நடைதுரை.நாகராஜன்

டகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இப்படிப் பருவம் மாறும் சூழ்நிலைகளில் கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இக்காலகட்டத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்தும் பராமரிக்கும் முறைகள் குறித்தும் காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் தேவகி சொன்ன தகவல்கள் இங்கே இடம்பெறுகின்றன.

“பொதுவாகக் குளிர்காலத்தில் கன்றுகளின் உடல் வெப்பநிலை சற்று அதிகமாகவும், கோடைக்காலத்தில் சற்றுக் குறைவாகவும் இருக்கும். இது இயல்பான விஷயம் என்பதால், கவலைபடத் தேவையில்லை. மூன்று வயது வரையுள்ள எருமைக் கன்றுகள், அதிகக் குளிரைத் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அதனால், கொட்டகையில் அதிகக் குளிர் தாக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குளிர்காலத்தில் நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகள் ஆகியவை தொற்ற வாய்ப்புகள் உண்டு. ஈ, கொசு போன்ற பூச்சியினங்களும் இக்காலத்தில் அதிகமாகப் பெருகி, நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். அதனால், கால்நடை வளர்ப்போர் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து, மழை மற்றும் குளிர்காலப் பிரச்னைகளிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick