தென்னைநார்க் கட்டி..! - பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்!

மதிப்புக்கூட்டல்ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.விக்னேஸ்வரன்

‘அணில் தாண்டா தென்னை ஆயிரம் உள்ளவன், அரசனுக்குச் சமம்’ என்று தென்னை விவசாயத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். கற்பக விருட்சம்போலத் தென்னையின் அனைத்துப் பாகங்களும் பலன் கொடுப்பதால்தான் தென்னைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இளநீர், தேங்காய், எண்ணெய், பதநீர், கருப்பட்டி, தென்னங்கீற்று, சீமார், பிண்ணாக்கு, நார்... எனத் தென்னையில் கிடைக்கும் பொருள்களையும் அவற்றின்மூலம் தயாரிக்கப்படும் பொருள்களையும் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

அவற்றில் வீணென்று கருதிக் கொட்டப்பட்ட தென்னை நார்க்கழிவுக்கும், இப்போது நல்ல விலை கிடைக்க ஆரம்பித்துள்ளது. அக்கழிவுமூலம் ‘காயர் பித்’ (Coir Pith) தயாரிக்கும் தொழில், கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துவருகிறது. குறிப்பாகப் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டைப் பகுதிகளில் இத்தொழில் படு மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

இந்தக் காயர் பித் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேவை அதிகமிருப்பதால், விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் காயர் பித் உற்பத்தியில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அடுத்துள்ள வங்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick