தொடரும் காப்பீட்டுக் குளறுபடி... கதறும் விவசாயிகள்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஷ்குமார்

டந்தாண்டு நிலவிய கடும் வறட்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி பெரியளவில் பாதிப்புக்குள்ளானது. பாதிப்புக்கு முன்பே விவசாயிகள் பலரும் நெல் பயிருக்குக் காப்பீட்டுத் தொகை செலுத்தியிருந்தனர்.  இதனால், ‘இழப்பீடு கிடைக்கும்’ என்று எதிர்பார்த்திருந்தனர். 

இந்தச் சூழ்நிலையில், நூற்றுக்கணக்கான கிராமங்களில் ‘வறட்சியால் பயிர்களுக்குப் பாதிப்பில்லை’ எனக் கைவிரித்துவிட்டது காப்பீட்டு நிறுவனம். மேலும், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்ட கிராமங்களில் பலருக்கும் ஒழுங்காக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்று நொந்துபோய்க்கிடக்கிறார்கள் டெல்டா பகுதி விவசாயிகள்.

இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், வங்கிகள் முற்றுகை... எனப் பல போராட்டங்களை நடத்திவருகிறார்கள் விவசாயிகள். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களிலும் இப்பிரச்னையே முதன்மையானதாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick