அரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை!

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ரா.ராம்குமார்

டிக்கடி உணவில் பயன்படுத்தக்கூடிய காய்களில் ஒன்று வெண்டைக்காய். பொரியல், வறுவல், கூட்டு, புளிக்குழம்பு, சாம்பார், வற்றல் என வெண்டைக்காயைப் பயன்படுத்திப் பல உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. மேலும், இந்தக் காயில் சில மருத்துவக்குணங்களும் இருப்பதால், நம் சமையலில் எப்போதுமே இதற்கு முக்கியமான இடமிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ‘ஆனைக்கொம்பன்’ ரக வெண்டைக்காயைச் சாகுபடிசெய்து, நேரடி விற்பனையின்மூலம் நல்ல லாபம் ஈட்டிவருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்பிரமணியம் செல்வம்.
கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் காட்டுப்புதூர் எனும் கிராமத்தில்தான் சுப்பிரமணியம் செல்வத்தின் தோட்டம் இருக்கிறது. ஒரு காலைவேளையில் வெண்டைக்காய் பறித்துக்கொண்டிருந்த சுப்பிரமணியம் செல்வத்தைச் சந்தித்தோம்.

“என் சின்ன வயசுல  நெல், மரச்சீனிக்கிழங்குனு அப்பா சாகுபடி பண்ணிட்டிருந்தாங்க. எங்க பகுதியில எல்லோரும் ஏத்தன் (நேந்திரன்) ரக வாழைக்கு மாற ஆரம்பிக்கவும் அப்பாவும் அதைச் சாகுபடி பண்ண ஆரம்பிச்சாங்க. நான் பத்தாம் வகுப்பு முடிச்சுட்டு அரிசி மண்டியில வேலை செஞ்சுட்டிருந்தேன். நேரம் கிடைக்கிறப்போ, அப்பாகூடச் சேர்ந்து விவசாய வேலைகளையும் செய்வேன். இப்போ, அஞ்சு வருஷமா மத்த வேலைகளையெல்லாம் விட்டுட்டு, முழுசா விவசாயம்தான் செஞ்சுட்டிருக்கேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick