ஏக்கருக்கு ₹ 50 ஆயிரம் வருமானத்தோடு மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்!

மகசூல்கு. ராமகிருஷ்ணன், படங்கள்: எஸ்.ராபர்ட்

ல ஆண்டுகளாக ரசாயன உரம் பயன்படுத்தி விவசாயம் செய்த நிலத்தை, இயற்கை விவசாயத்துக்கு மாற்ற பலதானிய விதைப்பு, பசுந்தாள் உரச்செடிகள் விதைப்பு எனப் பல முறைகளைக் கையாண்டு வருகிறார்கள் விவசாயிகள். ஆனால், மக்காச்சோளம் விதைத்து அறுபதே நாள்களில் மண்ணை வளப்படுத்தியதோடு, நல்ல விளைச்சலும் பார்த்திருக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி பிரதாபன்.

கடந்த 10.12.2015-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில், ‘மணக்கும் ஜீரோ பட்ஜெட் ரோஜா’ என்ற தலைப்பில் வெளியான மகசூல் கட்டுரைமூலம் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான் பிரதாபன். மக்காச்சோள வயலில் வேலைசெய்து கொண்டிருந்த பிரதாபனைச் சந்தித்தோம். “விவசாயக் குடும்பத்துல பிறந்ததால, சின்ன வயசுலிருந்தே விவசாயத்துல ஆர்வம். ‘மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளோமா’ படிச்சிட்டு, முழு நேர விவசாயியா மாறிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick