மரம் செய விரும்பு! - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்! | Trees series - Uses of Trees - Pasumai Vikatan | பசுமை விகடன்

மரம் செய விரும்பு! - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன்

‘தாய் நிலம் தந்த வரம் தாவரம்... அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்’- பொதிகை தொலைக்காட்சியின் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில் ஒலித்த இந்தப்பாடல் பலருக்கும் தெரிந்திருக்கும். நாம் நட்டு வைத்த தாவரங்கள் தழைக்கத் தழைக்க மனதில் மகிழ்ச்சி உருவாவதை அனைவரும் உணர்ந்திருப்போம். இப்படி நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் தாவரங்களில் சில இயற்கைச் சீற்றங்களின்போது நமக்குப் பாதுகாப்பு அரணாகவும் இருக்கின்றன. குறிப்பாக, கடற்கரையோரச் சதுப்பு நிலங்களில் வாழும் தாவரங்கள், கடலில் ஆக்ரோஷமாகப் பொங்கிவரும் அலைகளை ஆற்றுப்படுத்தி, சீற்றத்தைத் தணிக்கின்றன. அதனால், இத்தாவரங்கள் சூழ்ந்த சதுப்பு நிலக்காடுகளை ‘அலையாத்திக் காடுகள்’ என்று அழைக்கிறார்கள். ஆறும் கடலும் இணையும் கழிமுகப்பகுதிகளில் உருவாகும் காடுகள்தான் சதுப்பு நிலக்காடுகள்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick